பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் வாகன பெருக்கத்தால் அந்நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் தற்போது மிக மோசமான விடயங்கள்,
மாசு புகையால் ஆரோக்கிய சீர்கேடு
பிரான்ஸின் பாரீஸில் உள்ள Peripherique அருகில் உள்ள அணுகல் இரட்டை carriageway ரிங் சாலையில் வாகனத்தால் அதிகளவு மாசு ஏற்ப்படுகிறது.
அதுவும் இந்த வாரம் குறிப்பிட்ட அளவை விட மாசு புகை அதிகளவில் இங்கு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிராபிக் ஜாம்
பாரீஸ் நகரம் தான் பிரான்ஸிலேயே மிகவும் இடநெருக்கடி கொண்ட நகராகும். இங்கு வாகனங்கள் ஓட்டுபவர்கள் வருடத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் டிராபிக் நெருக்கடியிலேயே சிக்கி கொள்கிறார்களாம்.
போராட்டம்
பிரான்ஸில் பல இடங்களில் போரட்டம் அடிக்கடி நடக்கிறது. சாலையில் உட்கார்ந்து போராடுவது, நெருப்பை கொளுத்தி சாலையில் போடுவது போன்ற செயல்களால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை அடிக்கடி பாதிக்கிறது.
விபத்துக்கள்
மக்கள் தொகை அதிகமாக வாகனங்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாகிறது. இதனால் விபத்துக்களும் பிரான்ஸில் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தெற்கு பாரீஸில் அவசர வழிகள், ஸ்பீட் பிரேக்கர்கள் குறைவு, அதிக வேகம் போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்ப்படுகிறது.