காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவில் 10ஆவது நாளாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
குறித்த போராட்டத்தில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இணைந்திருந்த நிலையில் தற்பொழுது கர்ப்பிணித்தாய்மார்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த போராட்டம் அரசிற்கு எதிரான போராட்டம் என கருதி அரச திணைக்களங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்குஉதவுவதில் பின்வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இது அரசிற்கோஅல்லது இராணுவத்திற்கோ எதிரான போராட்டம் அல்ல என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான வைத்திய சேவைகள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.