யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் பலி..!!வீடியோ

241

 

யழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மற்றும் ஒரு இராணுவ வீரர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் இயங்கி வரும் இராணுவ முகாமில் இருந்து ஜீப் வண்டி மூலம் இரணுவ வீரர் இருவர் பயணம் செய்துள்ளனர். ஜீப் வண்டி மூலம் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன்  ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விபத்து தொடரப்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் மற்றும் படுகாயமடைந்த இராணுவ சிப்பாயையும் எடுத்துக் கொண்டு புகையிரதம் மீண்டும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினைக் நோக்கி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE