காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொ ன்றை அமைப்பதாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரி த்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்..
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தனர்.
இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்த இந்த சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான, விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதனை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் சிறப்பு பொலிஸ் குழுவொ ன்றை அமைக்கும் யோசனை அரசாங்கத்திடம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரின் முன்னிலையிலேயே நிராகரித்து ள்ளனர். இதனை இந்த சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் உறுதிப்படுத்தினர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் அதற்கு முன் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் காணாமல்போனோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது குறுக்கீடு செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம்கூட தனக்கு இல்லை என்று கூறி, மக்களின் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்துவிட்டதாக சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான தீர்மானத்தில் இருந்தால் போராட்டங்களை தொட
ர்வோம் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரசாங்கத்தினால் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட காணாமல்போனோரின் உறவினர்கள் சர்வதேச விசாரணையே தங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு அரண் என்றும் கூறினர்.
இதனிடையே கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சிலரது பெற்றோரும், காணாமல் போன ஊடக வியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொடவும் இன்று முற்பகல் பிரதமரை சந்திக்க அலரி மாளிகையில் காத்திருந்த போதிலும், பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவமும் இடம்பெற்றது.