அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணவே ஜேர்மனியும் ஐரோப்பாவும் விரும்புகின்றன

209

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு ஐரோப்பா மற்றும் ஜேர்மனி விரும்புவதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் (Angela Merkel) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் போலந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

அதன்போது கருத்து தெரிவித்த மெர்க்கெல், “தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெரும் பொருட்டு அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு ஐரோப்பாவும் ஜேர்மனியும் விரும்புகின்றன” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேட்டோ அமைப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானது எனவும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் உள்ளது எனவும் மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

SHARE