விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி வேண்டும்- சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

271

 

suresh 2வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்துவதற்கு எதிராக பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் நிறைந்துள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுக தமிழ் நிகழ்ச்சிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நேரில் சென்று ஏன் சந்திக்கவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி விட்டதா என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் இதுவரை தெரிவிக்கவில்லை.suresh 2

 

SHARE