ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரெசா மே மேற்கொண்டு வருகிறார்.
இந்த Brexit விவகாரத்தால் பிரித்தானியாவுக்கு எதிராக பிரான்ஸ் ஒரு அதிரடி முடிவை எடுக்கலாம் என தெரிகிறது.
தற்போது பிரான்ஸில் 250000க்கும் மேற்ப்பட்ட பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
வேலை, கல்வி என பல்வேறு விடயங்களுக்காக இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் விதத்தில் விடயங்கள் நடைபெறலாம் என பிரபல நாளிதழ் கூறியுள்ளது.
அதன்ப்படி, பிரான்ஸில் வசிக்கும் பிரித்தானியாவின் ஆணோ அல்லது பெண்ணோ பிரான்ஸ் நபரை திருமணம் செய்தாலும் அவர்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்படமாட்டது என சட்டம் வரலாம் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் 1500 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் என்பது முக்கிய விடயமாகும்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா அதற்கான பாதிப்பை சந்திக்க நேரிடும் என அந்த நாளிதழ் கூறியுள்ளது.