சிம்பு, விஷால், ஆர்யாவுக்கு கல்யாணம் ஆகாமல் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்- பிரபல நடிகர்

168

தமிழ் சினிமாவில் திருமணம் ஆகாமல் நிறைய பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிம்பு, விஷால், ஆர்யா, பிரேம்ஜி என பலர் இருக்கின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகாமல் தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்று கூறுகிறார் ஜெய். அவர் பேசும்போது, சிம்பு, விஷால், ஆர்யா, பிரேம்ஜி என என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணமான பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன். 

எனக்கு பல கனவுகள் உள்ளது, அவை இன்னும் நிறைவேறவில்லை. அப்படி இருக்கும்போது திருமணம் பற்றி நான் நினைப்பது இல்லை என கூறியுள்ளார்.

SHARE