சூர்யாவின் சிங்கம் 3 படம் வெற்றிகரமாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. ஒருபக்கம் ரசிகர்கள் படத்தின் வெற்றியை கொண்டாடி வர, சூர்யாவும் கொண்டாடியுள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அண்மையில் இப்பட படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சூர்யா சிங்கம் 3 பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.