அஜித்தின் ஐனா என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் பாபுராஜ்.
இவருக்கும் கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி என்ற இடத்தில் இருக்கும் மக்களுக்கும் தண்ணீர் சம்பந்தப்பட்டு சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை முற்றியதில் சன்னி என்பவர் அரிவாளால் நடிகர் பாபுராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த நடிகர் பாபுராஜு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.