மட்டக்களப்புத் தேனகம் தினகரன் உலாவின் அங்குரார்ப்பண நிகழ்வு.

267

 

மட்டக்களப்புத் தேனகம் தினகரன் தேனக உலாவின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு நகர மண்டபத்தில் புதன்கிழமை மாலை (15) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலிமாறக் குருக்கள், புனித சிசிலியா பெண்கள பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியா, மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ் மௌலவி எம்.எஸ். அலியார் பலாஹி, மாளிகாவத்தை போதிராஜாராம விகாராதிபதி உவத்தென்ன சுமண தேரர் ஆகியோர் நிகழ்வுக்கான ஆசியுரைகள் வழங்கினர்.

தினகரன் பிரதம ஆசிரியர் கே. குணராஜா, செய்தி ஆசிரியர் கே. அசோக்குமார், இணைச் செய்தி ஆசிரியர் மர்லின் மரைக்கார் ஆகியோரை சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மாவட்ட பணிப்பாளர் மீராசாய்பு நினைவுச் சின்னம் வழங்க மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா, உப செயலாளர் எம். சியாம் மற்றும் மாவட்ட கட்டிட ஒப்பந்தக்காரர் ஒன்றியத் தலைவர் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி ; பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்,

பிரதி ஆசிரியர் அருள் சத்தியநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பி. வீரசிங்கம் ஆகியோருக்கு கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்மா சம்மேளனத்தின் பொருளாளர் எஸ்.சந்திரா நினைவுச் சின்னம் வழங்க சம்மேளனத்தின் ஆலோசகர் கௌரவ கலாநிதி லயன் கே. செல்வராஜா கொண்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இ. பாக்கியராஜா, ரி.எல். ஜப்பர்கான், செ. பேரின்பராஜா, முஸ்தபா மௌலவி, எம்.எஸ்.எம். நுர்ர்தீன், சிவம் பாக்கியநாதன் ஆகியோர் தினகரன் பிரதம ஆசிரியர் கே. குணராசாவினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம், பிரதி; தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், மாகாணசபை உறுப்பினர்களான இரா துரைரத்தினம், ஞா. கிருஷ்ணபிள்ளை, கோ. கருணாகரன், எம். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், மாநகர ஆணையாளர் வி. தவராஜா, பேராசிரியை சித்திலேகா மௌனகுரு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வரா

SHARE