இனிமேல் ரோபோக்களுக்கும் வரி பில்கேட்ஸின் பலே திட்டம்

221

மனிதர்களுக்கு பதிலாக வேலைக்கு அமர்த்தப்படும் ரோபோக்களும் வரி செலுத்த வேண்டும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

தற்போது மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கும், அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் பணியமர்த்தப்படுகிறது.

இதனால் மனிதர்களின் வேலை பறிபோகிறது, மனிதர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் மிச்சப்படுவதாக முதலாளிகள் கருதுகின்றனர்.

எனவே மனிதர்களுக்கு விதிக்கப்படும் வரியை போன்று ரோபோக்களுக்கும் வரி விதிக்க வேண்டும் என உலகின் நம்பர் 1 பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தை முதியோர் நலன் பாதுகாப்பு மற்றும் மகளிர் நலன் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE