உடல் எடையை குறைக்கும் இஞ்சி கலந்த பீட்ரூட் ஜூஸ்

190

உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கனவு கண்டால் மட்டும் போதாது. அதை நனைவாக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தை காக்க உணவே மருந்து என்கிற கொள்கையை பின்பற்றுங்கள்.

எனவே, நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால், உங்களின் தினசரி உணவுகளின் ஒரு அங்கமாக இயற்கையான சுகாதார பானங்கள் மற்றும் உணவுகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளூங்கள்.

செய்முறை : மிக்ஸியில் சில இஞ்சித் துண்டுகள், எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு ஆகிய மூன்றையும் நன்கு கலக்க வேண்டும். அதன் பின்னர் அதை நன்கு வடிகட்டி வரும் சாற்றை தினவும் காலை வெறும் வயிற்றில் ஒரு கப் அருந்தி வர வேண்டும்.

1. உயர் இரத்த அழுத்தம்:

இந்த இயற்கையான சுகாதார பானம், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. ஏனெனில் இதில் உள்ள நைட்ரேட் கூறுகள் இரத்த நாளத்தை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்ற்து. அதன் காரணமாக ஆரோக்கியமான முறையில் உங்களின் உடலில் ரத்தம் பாய்ந்து ஓடுகின்றது.

2. ஸ்ட்ரோக்:

பீட்ரூட், இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவை ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் மூளைக்குச் செல்லும் ரத்த அளவும் அதிகரிக்கின்றது. அதன் காரணமாக மூளையில் கட்டி வராமல் தடுக்கப்படுகின்றது. மற்றும் மூளையில் அதிகரிக்கும் ரத்த ஓட்டம் பக்கவாதம் வராமல் தடுக்கின்றது.

3. உடல் ஊக்கி:

இந்த மூலிகை சுகாதார பானத்தில் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியன உள்ளன. இவை உங்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஊக்கப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கின்றது.

4. அஜீரணம்:

இந்த சுகாதார பானம்ளி, உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தை சமப்படுத்துவதால், இது அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட் நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகின்றது.

5. ஆரோக்கியமான சருமம்:

தவறாமல் இந்த பீட்ரூட், எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு கலவையை உட்கொள்வதன் மூலம், நீங்கள் பளபளப்பான தோலை அடைய முடியும். ஏனெனில் இந்த பானம் உங்கள் தோல் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து ஒரு ஆரோக்கியமான பளபளப்பான நிறத்தை உங்களின் தோலிற்கு தருகின்றது.

6. குடல்களை சுத்தமாக்குகின்றது:

இந்த சுகாதார பானம், உங்கள் பெருங்குடலில் தேங்கியுள்ள அசுத்தம் மற்றும் நச்சுக்களை நீக்குகின்றது. அதன் காரணமாக உங்களின் குடல் சுத்தமடைந்து ஆரோக்கியமாக விளங்குகின்றது.

7. எடையை குறைக்க:

இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அதன் காரணமாக உங்களின் உடலில் உள்ள அதிகமான கொழுப்புகள் எரிக்கப்படுகின்றது. எனவே இந்த இயற்கையான சுகாதார பானம், எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.

SHARE