நடிகர் விஜய் எப்போதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தவர். ஹிட் படங்களை கொடுத்தாலும் வசூலில் மாஸ் காட்டிவிடுகிறார்.
சினிமாவிலும் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். உடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று விஷயங்கள் பிடித்திருக்கும்.
நடிகர் சாந்தனுவுக்கும் விஜய்யை பிடிக்கும். இவர் தற்போது விஜய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை நினைவு கூர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் விஜய் அடுத்தவர்கள் தொட்ட உயரத்தை நீங்கள் இலக்காக வைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக கொடுங்கள் என கூறியிருப்பார்.
நடிகர் சாந்தனு இதனால் தான் விஜய் இளையதளபதியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.