தேன் கலந்த இந்த பேஸ்டில் இவ்வளவு அதிசய நன்மைகள் உள்ளதா?

195

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த கலவையானது நமது உடலில் பக்டீரியா மற்றும் கிருமிகளிடம் இருந்து எதிர்த்து போராடும் தன்மையைக் கொண்டுள்ளது.

எனவே நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய் தொற்றுக் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

தேன் மற்றும் இலவங்கப் பட்டையின் மருத்துவ நன்மைகள்
  • காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான நீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் தூளை சிறிதளவு கலந்து அதை நன்றாக கொப்பளித்து வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம், மற்றும் பல்வலி நீங்கிவிடும்.
  • சிறுநீர்ப்பை தொற்றுக்கள் மூலம் அவஸ்தைப்படுபவர்கள், 1 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு கப் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
  • முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளி இருப்பவர்கள், இரவு தூங்கும் முன் தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் கலவையை முகத்தில் தடவி, காலையில் முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பேஸ்ட்டை வலி உள்ள இடத்தில் மஜாஜ் செய்ய வேண்டும். அல்லது இதில் டீ செய்து குடித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், வயிறு மற்றும் எலும்புகள் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பேஸ்ட் தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. அதை சாப்பிடுவதால், நமது உடம்பின் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இருமல், மலட்டுத்தன்மை பிரச்சனையை தடுக்கிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
SHARE