சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெற்றசோ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரிபுர பகுதியில் செல்வக்கந்த தோட்டத்தில் தேயிலை மலைப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போதே 28.02.2017 அதிகாலை 2 மணியளவிலே பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது.
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை 28.02.2017 அட்டன் மாவட்ட நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்