நுவரெலியா மாவட்ட அரச வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

487

மாலம்பே சைட்டம் கல்லூரியை தடைசெய்யக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் 28.02.2017 காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சைட்டம் திட்டத்தை இரத்து செய்யக்கோரி அண்மைக்காலமாக அரச வைத்தியர் சங்கத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

சைட்டம் கல்லூரியை தடை செய்யக்கோரியும் இலவச வைத்திய துறை மற்றும் இலவச கல்வி முறை அழிவு பாதையில் செல்வதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, சோதனைப்பிரிவுகள் முற்றாக செயலிழந்து காணப்படுவதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மேலும் கொட்டகலை, நுவரெலியா, லிந்துலை பிரதேச அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

SHARE