மன்னார் மாவட்டத்தில் வறிய மாணவர்களின் கல்வி செயற்ப்பாடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்று நான்கு பேருக்கான துவிச்சக்கரவண்டி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG-2016) நிதியிலிருந்து வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு மன்னாரில் அமைந்துள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று 27.02.2017 திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.
அதன்போது முசலி P.P.பொற்கேணி மற்றும் S.P.பொற்கேணி பகுதியை சேர்ந்த அஸ்வர்கான், துல்மில்கான், ரவூப் ஆகியோரின் பிள்ளைகள் பாடசாலைக்கு மிக நீண்டதூரம் பயணம் செய்வதாகவும், குறிப்பாக 3 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் அன்றாடம் நடந்தே பாடசாலைக்கு செல்வதாகவும் அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி உதவுமாறும் அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள்விடுத்ததை ஏற்று அவர்களின் குடும்ப நிலையினை கருத்தில்கொண்டு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பனங்கட்டுகொட்டு மேற்கைச் சேர்ந்த தந்தையினை இழந்த நலிவுற்ற குடும்ப யுவதி ஒருவருக்கு அவரது கல்வியினை தொடர்வதற்காகவும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலை முகாமையாளர் அவர்களும் கலந்துகொண்டு அமைச்சருடன் இணைந்து அவற்றினை வழங்கிவைத்தார்.