காரைத்தீவில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்றும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் காரைத்தீவு விபுலானந்தா சதுக்கத்திற்கு அருகாமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன, மத, மொழி பாகுபாடின்றி தொடர்ந்துள்ள இந்த போராட்டத்தில் இன்று அவர்களின் சிறிய குழந்தைகளும் கலந்திருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும், வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தினை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.