ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
தினமும் காலையில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவு கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- ஆலிவ் ஆயில் கலந்த இந்த கலவையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இது நமது உடம்பில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, குடலியக்கம் மற்றும் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் தேங்காமல் தடுக்கிறது.
- உடலில் நச்சுக்களை வெளியேற்றி, உடல் சோர்வு, உப்புசம், தலைவலி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கல்லீரல் மற்றும் பித்தப்பையின் செயல்பாட்டை சீராக்குகிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்தக் கலவையை சாப்பிட்டு வந்தால், இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு அல்லது கீல்வாத வலிகள் ஏற்படாமல் தடுக்கிறது.