தமிழ் சினிமாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், அப்படி என்ன நடந்தது வித்யா பாலனுக்கு?

173

வித்யா பாலன் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தமிழில் கொடிக்கட்டி பறந்த சில்க்கின் வாழ்க்கை வரலாறில் நடித்து தேசிய விருது வென்றவர்.

இவர் மலையாள படத்தில் கூட நடித்துள்ளார், ஆனால், இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட நடித்தது இல்லை, அதற்கு ஒரு ப்ளாஷ் பேக் உள்ளது.

வித்யா பாலன் முதன் முதலாக ஸ்ரீகாந்த் நடிக்கவிருந்த மனசெல்லாம் படத்தில் தான் அறிமுகமாக இருந்தார். அப்படத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார்.

ஆனால், இவருக்கு நடிப்பே வரவில்லை என்று அந்த படத்திலிருந்து இவரை நீக்கியுள்ளனர், அதன் காரணமாகவே இவர் தமிழ் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து வருகின்றார்.

இந்நிலையில் ரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தில் வித்யா பாலன் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE