கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் போன்றோர்கள் பாக்ஸ் ஆபிஸின் மன்னர்கள். இவர்கள் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஆனால், இவர்கள் அனைவருமே மாஸ் என்ற ஒரு வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்து வருகின்றனர்.
எப்போதாவது தான் தங்கள் எல்லையை தாண்டி ஒரு சில படங்களில் நடிப்பார்கள், ரஜினி கூட கபாலியில் வேறு தளத்தில் பயணித்தார், அஜித்தும் கிரீடம், என்னை அறிந்தால் என கொஞ்சம் கமர்ஷியல் விலகி நடித்தார்.
சூர்யாவும் வாரணம் ஆயிரம், ரத்த சரித்திரம் என கமர்ஷியல் பார்முலாவை தவிர்த்து நடித்தார், ஆனால், இந்நிலையில் இவர்கள் அனைவருமே 3 ரோல்களில் நடித்துள்ளனர். விஜய் மட்டுமே இதுவரை 3 ரோல்களில் நடிக்கவில்லை.
தெய்வமகன்
சிவாஜி கணேசன் 9 அவதாரங்களில் நடித்துவிட்டார், 3 அவதாரம் எல்லாம் அவருக்கு சர்வ சாதரணம், இருந்தாலும் தெய்வமகன் ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அபூர்வ சகோதரர்கள்
சிவாஜியின் கலையுலக வாரிசு கமல், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள் அப்படித்தான், கமல் 10 அவதாரங்களில் நடித்து அசத்தினார், இவரும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் 3 வேடங்களில் நடித்தது மிகவும் வரவேற்பு பெற்றது.
மூன்று முகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவர் வந்தாலே நம் கண் ஸ்கிரீனை விட்டு விலகாது, இதில் மூன்று பேர் என்றால், சொல்லவா வேண்டும், பொறுப்பான போலிஸ், சொகுசு வாழ்க்கை வாழ்பவர், லோக்கல் பையன் என கலக்கியிருப்பார்.
வரலாறு
இதுவரை எந்த ஒரு மாஸ் ஹீரோவும் செய்ய துணியாத கதாபாத்திரத்தில் அஜித் நடித்து அசத்தினார், பெண் தன்மை கொண்ட ஒரு கதாபாத்திரம், அவருக்கு இரண்டு மகன்கள் என வரலாறு லேட்டாக வந்தாலும் செம்ம ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது.
24
சூர்யாவும் எப்போதும் படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர், அப்படித்தான் டைம் மிஷின் கதையை கையில் எடுத்து அதில் 3 ரோல்களில் நடித்தார், அதிலும் ஆத்ரேயா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
விஜய்-61
இதுவரை பெரிதும் சோதனை முயற்சிகளை எடுக்காத விஜய், முதன் முறையாக 3 கெட்டப்புகளில் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருமே 3 ரோல்களில் ஹிட் அடிக்க, விஜய்யும் ஹிட் கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.