சில பாதுகாப்பு படையினர் தமது பணியை சரிவர நிறைவேற்றத் தவறுவதால் பொதுமக்கள் ஆபத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக ஊர்காவற் படை பரிசோதகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள 43 படையினர் சிறந்த சேவையை வழங்கி வருகின்ற போதிலும், பிற படையினர் அடிப்படை சேவைகளையேனும் வழங்குவதற்கு தவறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒருசில குற்றவாளிகள் மாத்திரமே பொலிஸாரினால் கைதுசெய்யப்படுவதாகவும், இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதாகவும் படையினர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.