பிரித்தானியாவில் பெருமளவான வைத்தியசாலைகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் காணப்படுவதில்லை என கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் அதிகளவான நோயாளர்களின் வருகை என்பனவே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களானது நோயாளர்களை ஆபத்தான நிலைக்கு உட்படுத்துகின்றது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் தாமதம் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுவோர் குறித்த அக்கறையும் மந்தமாகவே காணப்படுவதாக பராமரிப்பு தர ஆணைக்குழுவின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான ஆய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.