அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் என்னை அறிந்தால். இப்படம் சத்யதேவ் IPS என்ற பெயரில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. கன்னடத்தில் வெளியாகும் முதல் டப்பிங் தமிழ் படம் என்ற பெருமையோடு வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் அஜித்தின் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு நான் தீ வைப்பேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் அடிப்படைவாத பிரிவுகளில் இருக்கும் வட்டல் நாகராஜ்.
கன்னட நடிகர் ஜக்கேஷும் இதையே கூறியுள்ளார். போலீஸ் இதுகுறித்து எங்களை அணுகினால் பார்த்துக் கொள்வோம் என்றார். அதேபோல் சது கோகிலா, ஷரண், அகுல் பாலாஜி என பல நடிகர்களும் அஜித் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன் கன்னட சினிமாவில் டப்பிங் படங்கள் வெளியாக கூடாது என்ற தடை இருந்தது குறிப்பிடத்தக்கது.