விஜய் ஆண்டனி தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் தான்.
இந்நிலையில் சைத்தான் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது, இருந்தாலும் போட்ட பணத்திற்கு மேல் லாபம் வந்தது.
அதேபோல் தான் எமன் படமும், கலவையான விமர்சனங்களை சந்திக்க, மற்ற நடிகர்கள் படம் என்றால் கண்டிப்பாக தோல்வியடைந்திருக்கும்.
ஆனால், எமன் படமும் ஹிட்டாகியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் விஜய் ஆண்டனியே படத்தை தமிழகம் முழுவதும் ரிலிஸ் செய்கிறார்.
மேலும், தன் மார்க்கெட் இதுதான் என தெரிந்து அவர் படத்தை விற்பது தான் தொடர் லாபத்திற்கு காரணம்.