அப்போ நம்ம எல்லாருமே செத்து போலாமா? சத்யராஜ் உச்சக்கட்ட கோபம்

212

சத்யராஜ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அவர் எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் தனக்கு தவறு என்று தெரிந்தால் திட்டிவிடுவார்.

இந்நிலையில் இவர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் ‘நாட்டிற்காக தமிழக மக்கள் தியாகம் செய்வதில் என்ன தவறு?’ என்று ஒரு கட்சி கேட்டுள்ளதே அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.

அதற்கு சத்யராஜ் மிகவும் கோபமாக ‘தியாகம்ன்னா என்னங்க, நம்ம எல்லோரும் செத்து போலாமா? இதை விட ஒரு மோசமான வார்த்தை இருக்காது.

முதலில் ராணுவ வீரர்கள் கையில் இருக்கும் துப்பாக்கிளை வாங்கி அரசியவாதிகள் கையில் கொடுத்து போருக்கு செல்ல சொல்லுங்கள், நாட்டில் எந்த ஒரு இடத்திலும் போர் நடக்கவே நடக்காது’ என கூறியுள்ளார்.

SHARE