கோலிவுட்டில் கடந்த வருடம் அதிக வசூல் செய்த படங்கள் கபாலி, தெறி தான். இந்த இரண்டு படங்களையும் கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரித்தார்.
இந்நிலையில் விரைவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கவுள்ளது, இந்த தேர்தலில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால் அணி களம் இறங்குகின்றது.
நேற்று இவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல்ராஜா ‘தாணு சார் தலைவராக இருந்து என்ன செய்து விட்டார், தெறி, கபாலி போன்ற படங்களின் தொலைக்காட்சி உரிமை கூட இன்னும் விற்கவில்லை.
மேலும், அந்த இரண்டு படங்களும் கடும் தோல்வியை சந்தித்தது, அதனால், தான் தாணு சார் நஷ்ட ஈடு கூட கொடுக்க முடியாமல் இருக்கின்றார்.
நாங்கள் ஜெயித்தால் தாணு சாருக்கு அந்த இரண்டு படத்தையும் நல்ல விலைக்கு தொலைக்காட்சி உரிமத்தை விற்று தருவோம்’ என கிண்டலாக கூறியுள்ளார். இவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.