சூர்யா நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் சிங்கம்-3. இப்படம் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், விநியோகஸ்தர்கள் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்தது, இந்நிலையில் இப்படம் வெற்றியா, தோல்வியா என்பது குழப்பத்திலேயே இருந்தது.
இந்நிலையில் மலேசியாவில் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது. அங்கு சுமார் ரூ 9 கோடி வரை சிங்கம்-3 வசூல் செய்துள்ளதாம்.
கபாலி, வேதாளத்திற்கு பிறகு சிங்கம்-3 தான் சமீபத்தில் மலேசியாவின் அதிகம் வசூல் செய்த படம் என கூறப்படுகின்றது.