டிரம்பின் புதிய தடை உத்தரவுக்கு ஆப்பு வைக்கும் நீதிமன்றம்

218

அமெரிக்காவுக்குள் ஆறு இஸ்லாமிய நாடுகளின் மக்கள் நுழைய விதிக்கப்பட்ட புதிய தடை உத்தரவை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ள புது உத்தரவில் சிரியா, லிபியா, ஏமன், ஈரான், சோமாலியா, சூடன் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை என கூறியிருந்தார்.

முன்பு இந்த பட்டியலில் இருந்த ஈராக் நாடு இதில் இருந்து தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரம்பின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் Hawaii மாநிலம் அதிரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE