பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய விஜய் படக்குழு

175

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது விஜய்-61. இப்படத்திற்கு மூன்று முகம் என டைட்டில் வைக்கலாம் என படக்குழு எண்ணியுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது, இதில் விஜய்யுடன் பல நடன கலைஞர்கள் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

மேலும், ஊர் மக்கள் சிலரும் ஆட, அதில் ஒரு சிலர் அந்த பாடலை யாருக்கும் தெரியாமல் பதிவு செய்துள்ளனர். இதை படக்குழு உடனே கவணித்துள்ளது.

அட்லீ அந்த இடத்திற்கு சென்று அவர்கள் பதிவு செய்த பாடலை வாங்கி டெலிட் செய்துள்ளார், கொஞ்சம் தவறியிருந்தால் விஜய்-61 ஓப்பனிங் சாங் லீக் ஆகியிருக்கும்.

SHARE