பிரபல நடிகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருவது வழக்கமான விஷயம். அந்த வகையில் நடிகையர் திலகம் சாவித்ரியன் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
அதோடு சாவித்ரி வேடத்தில் நடிப்பதாக பல நாயகிகளின் பெயர்கள் கூறப்பட்டன. தற்போது சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க இருக்கிறாராம்.
நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் சமந்தா தான் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.