ரஜினி, கமல் இருவரும் ஒன்றாக நடிப்பார்களா என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் பலர். ஆனால் அவர்கள் படம் நடிப்பது மிகவும் கடினமான விஷயம்.
ஆனால் அவர்கள் ஒன்றாக நிகழ்ச்சிகள் செல்வது என ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நட்டி தான் நடிக்கும் எங்கிட்டே மோதாதே படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்த படத்தில் நடித்திருக்கும் தன்னுடைய கேரக்டர் ரஜினிக்கு கட்-அவுட் வைப்பது போலவும், தன்னுடைய சக நடிகர் ராஜாஜி கமல்ஹாசனுக்கு கட்-அவுட் வைப்பது போலவும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் வசதியான தேதி ஒன்றில் அந்த சிறப்பு காட்சி இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.