டொரன்டோ நகர சபை உறுப்பினராக தெரிவாகிய இலங்கைத் தமிழர் யாழ். விஜயம்

197

கனடா டொரன்டோவின் நகரபிதா ஜோன் டொரி, தெற்காசியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவருடன், டொரன்டோ நகர சபை உறுப்பினராக அண்மையில் தெரிவான இலங்கைத் தமிழர் நீதன் ஷானும் வருகைத் தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன் ஷான், டொரன்டோ நகர சபை உறுப்பினராக தெரிவானார்.

கல்வி தொழிநுட்பத் துறை அபிவிருத்தியை நோக்காக கொண்டே, எதிர்வரும் 15ஆம் திகதி தெற்காசியாவுக்கு ஜோன் டொரி விஜயம் மேற்கொள்வுள்ளார்.

கனடா டொரன்டோவின் நகரபிதா ஜோன் டொரி, இந்தியாவில் 10 நாட்கள் தங்கவுள்ளார். டொரி, ஸான், மைக்கள் தொம்சன் ஆகியோர் கனடாவிற்கு சென்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திலும் ஒரு நாள் தங்கவுள்ளனர்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு உதவுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என நீதன் ஷான் தெரிவித்துள்ளார்.

பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன், பன்மொழி ஆசிரியராகக் கடமை புரிந்தவர் கடந்த பல வருடங்களாகவே போட்டியிட்டே நீதன் இந்த பதவியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE