பிரித்தானியாவில் உள்ள டெஸ்கோ நிறுவனம்,சுமார் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கடமைப்பட்டுள்ளது.
ஊதிய அமைப்பின் செயலற்றத் தன்மையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு 10 மில்லியன் பவுண்ட் சம்பளம் வழங்க முற்பட்டாலும் அதிக ஊழிர்கள் 40 பவுண்டுகளை பெற்றுக் கொள்கின்றனர்.
புதிய சம்பள பட்டியலில் ஏற்பட்ட பிழையை தற்போது டெஸ்கோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் கடந்த 6 வருட சம்பள பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மார்ச் மாத இறுதியில் சம்பளம் மீள செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிழையினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விரைவில் இந்த பிரச்சினை தொடர்பில் ஆய்வு செய்து தீர்வு பெற்றுத் தருவதாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள டெஸ்கோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.