ஒருமுறை நான் இரவு நேர படப்பிடிப்பு முடித்து திரும்பிய போது, கேரளாவில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன்.
குடித்துவிட்டு வந்த மர்ம நபர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர், அவர்களிடம் இருந்து என்னை சிலம்பாட்டத்தின் மூலமே காப்பாற்றிக் கொண்டேன் என தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
`பேராண்மை’ படத்தின் போது சிலம்பாட்டம் கற்றுக்கொண்டதாக தன்ஷிகா தெரிவித்தார். எனவே பெண்கள் அவர்களது இக்கட்டான சூழலில், அவர்களை காப்பாற்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தன்ஷிகா வலியுறுத்தி உள்ளார்.