வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் நடைபெறவுள்ள மண்டபத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு

267

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் நடைபெறவுள்ள மண்டபத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கூட்டம் நடைபெறவுள்ள விருந்தினர் விடுதி மண்டபம் விசேட அதிரடிப்படையால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் விவகாரம், காணி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் அண்மைக்காலமாக கூட்டமைப்பு உறுப்பினர்கள், பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

 

SHARE