ஜெயலலிதா அறைக்கு அருகில் இருந்தவர் பரப்பு தகவல்

195

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று ஜெயலலிதா அறைக்கு அருகில் இருந்த மருத்துவரிடம் இது குறித்து கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அளித்த பதில் இது தான் என்று கூறியுள்ளது.

அவர் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் இருந்த அறைக்கு அருகில் தான் தாங்கள் இருந்ததாக கூறியுள்ளார்.

அப்பல்லோவுக்கு ஜெயலலிதாவை அழைத்து வந்த போது தரைத்தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மட்டும் 10 கேமராக்கள் உண்டு. இரண்டாவது மாடியிலுள்ள அவசர சிகிச்சை, வார்டின் வெளிவாயிலிலும் வராண்டாவிலும் 2 கேமராக்கள் இருக்கின்றன. லிப்ட்டுக்கு வெளியேயும் ஸ்கேன் அறைக்கு வெளியேயும் கேமரா உண்டு. அதனால், மருத்துவமனையில் அம்மாவை பற்றிய கேமரா பதிவுகள் இருக்க வேண்டும்.

ஒரு நோயாளியின் உடலை பரிசோதிக்கும் போது தான் கேமராக்கள் இயங்கக்கூடாது. அதனால், ஜெயலலிதாவை அழைத்துவந்த ஆம்புலன்ஸ் அப்பல்லோவிற்கு வந்தபோதும், ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சரில் வைத்து எமெர்ஜென்சி வார்டுக்கு கொண்டு போகப்பட்டபோதும் கேமராக்கள் இயங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE