கள்ளச் சாமி பிரேமனந்தாவின் ஆச்சிரமத்தில் வடக்கு மாகாண முதலமைச்சா்

255

கள்ளச் சாமி பிரேமனந்தாவின் ஆச்சிரமத்தில் வடக்கு மாகாண முதலமைச்சா்

 
ஆசிரமத்துக்கு வந்த ஏராளமான பெண்களை மயக்க மருந்து கொடுத்து வன் கலவி செய்ததாகவும், இளைஞர் ஒருவரை கொலை செய்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடந்த பெப்ரவரி மாதம் சிறுநீரகக் நோய் காரணமாக உயிரிழந்த கள்ளச்சுவாமி பிரேமானந்தாவின் ஆச்சரமத்திற்கு இலங்கையில் இருந்து ஓடோடிச் சென்றுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ் நாட்டில் எத்தனையோ ஆச்சரிமங்கள் இருக்கும் போது இந்தக் கள்ளச் சாமியின் ஆச்சிரமத்திற்கு எதற்காக வடக்கு முதல்வா் சென்றார் என்பது தெரியவில்லை.
அண்மையில் கூட ஒரு அறிக்கையில் கள்ளப் புருசன் பற்றிய கதையை உதாரணத்திற்குச் சொன்னவா் இந்த வடக்கு முதல்வா்.
தமிழ்நாட்டில் உள்ள திருச்சி பாத்திமா நகரில் கள்ளச்சுவாமி பிரேமானந்தா ஆச்சிரமம் நடாத்தி வந்துள்ளார். இந்தப் பிரேமானந்தா 1983ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா சென்றவராவார்.
திருச்சியில்  ஆச்சிரமம் நடாத்தி வந்த பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இதைப் பற்றி அறிந்த ஒரு இளைஞனையும் கொலை செய்ததும் குறிப்பிடத்திக்கது.
இவரால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அழுது அழுது பிரேமானந்தாவுக்கு எதிராக கடும் கோபத்துடன் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிரபலமான சட்டத்தரணிகளின் உதவியுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரமுயன்ற பிரேமானந்தாவை அனைத்து ஆதாரங்களுடன் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது நீதிமன்றம். அதன் பின்னா் பிரேமானந்தா கடந்த பெப்ரவரியில் நோய்காரணமாக உயிரிழந்தார்.
இந் நிலையில் இவ்வாறான ஒரு சாமியாரின் ஆச்சிரமத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சா் சென்று தங்கியுள்ள செய்தியால்  வடபகுதிப் பெண்களின் வயிற்றில் புளி கரைக்கப்பட்டுள்ளது.
SHARE