கடைசிக்கட்டப் போரில், புலித்தலைமைகள் சனத்தை தப்பியோட விடாமல் தங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக வைத்திருந்து, தாங்கள் மட்டும் உயிர் தப்பினால் காணும் என இராணுவத்தினரிடம் சரணடைந்து கடைசியில் இராணுவத்தினரால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு உயிர்விட்டவர்களின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன…அந்த வகையில் புலிகளின் கேணல் வசந்தன் என்பவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்..
கடைசிக்கட்டப் போரில், சரணடைந்து கடைசியில் இராணுவத்தினரால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு உயிர் விட்டவர்களின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன…அந்த வகையில் புலிகளின் கேணல் வசந்தன் என்பவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்..
இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தமக்கு என்ன ஆகப்போகின்றதோ என்ற ஏக்கத்தோடு நிலத்தில் அமர்த்தப்பட்ட நிலையில் சில தமிழர்கள் உள்ள காட்சிப்பதிவாக புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
அப் புகைப்படத்தில் முதலாவதாக இருப்பவர் புலிகளின் கேணல் வசந்தன் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். புலிகளின் கேணல் வசந்தனது உறவினர்கள் தொடர்பு கொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதில் உள்ள இன்னுமொருவர் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் சிறீலங்காப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும், கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து செய்யப்பட்டவராம். 2006 இன் பிற்பகுதியில் திருமலை மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற வசந்தன் அவர்கள் கேணல் தர போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகளின் பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் புகைப்படம் வெளியாகியுள்ளது. விடுதலை புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இராணுவத்தினரிடம் சரணடைந்து கோழை சாவடைந்துள்ளார்.