இலங்கையில் கொழும்பில் மட்டும் நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நாளொன்றிற்கு ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக 500 மில்லியன் ரூபா நட்டமடைவதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாள் ஒன்றிக்கு சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதாகவும், அதில் 4 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவை தனியார் வாகனங்கள் எனவும் பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் நாளொன்றிற்கு 19 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொழும்பிற்குள் வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருதானை, பொரளை சந்தி, கனத்தை சுற்றுவட்டம், நாராஹேன்பிட்டி பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்படுவதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறுகின்றது.
இந்த நிலையில் குறித்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே ஒரே வழி எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.