உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்

273

ரஷ்யாவை சேர்ந்த 7 வயது சிறுமி உடலுக்கு வெளியே இதயத்துடன் வாழ்ந்து வருகிறார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் Virsaviya (7), இவருக்கு பிறப்பிலிருந்தே உடலில் வினோத பிரச்சனை இருந்து வருகிறது.

அதாவது Virsaviyaவின் மார்புக்கு வெளிப்பக்கம் இதயம் துடிக்கிறது. மேலும் அவர் இதயம் தனியாக வெளிப்பக்கமாக தெரிகிறது.

உடல் சதை மட்டுமே அதை மூடி மறைத்துள்ளது. மில்லியனில் ஒருவருக்கு தான் இப்படியான பிரச்சனை வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த விசித்திர பிரச்சனைக்கு Thoraco-abdominal syndrome என்பது பெயராக உள்ளது.

Virsaviyaவை அழைத்து கொண்டு அவர் தாய் பிரச்சனையை சரி செய்ய உலகம் முழுவதும் வலம் வருகிறார்.

ஆனால் அதை சரி செய்ய முடியவில்லை. சமீபத்தில் கூட அமெரிக்காவின் Boston நகரில் உள்ள மருத்துவர்களை Virsaviya சந்தித்துள்ளார்.

Virsaviyaவுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அவருக்கு ஆப்ரேஷன் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

SHARE