சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் நடுவே ரயில்பாதை

298

சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பின் ஆறாவது மாடி வழியாக ரயில் பாதை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் அமைந்துள்ள 19 மாடிகள் கொண்ட குடியிருப்பில் 6-வது தளத்தில் குறித்த ரயில் நிலையம் இயங்கி வருகிறது.

லிஸிபா என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தில் லகு ரக பயணிகள் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.

49 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த மாகாணத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக இந்த வித்தியாசமான திட்டத்தை அங்குள்ள ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

6-முதல் 8 வரையான தளங்களில் மட்டுமே ரயில் பாதை அமைந்துள்ளதால் பயணிகள் எவ்வித பிரச்னையும் இன்றி ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மட்டுமின்றி ரயில் வந்து செல்வதால் ஏற்படும் அதிக சத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக் சிறப்பு கருவிகளை குறித்த 3 தளங்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் ரயில் வந்து செல்வது எஞ்சிய தளங்களில் குடியிருக்கும் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதில்லை என கூறப்படுகிறது.

மேலும் ரயில் பாதை அமைப்பதற்காக குறித்த கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கும் சூழலும் எழவில்லை என கூறும் நிர்வாகத்தினர், மக்கள் தொகை அதிகம் கொண்ட இதுபோன்ற மாகாணத்தில் வேறுபட்ட சிந்தனையே வெற்றி பெறும் என்றார்.

SHARE