தெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு

274

தெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்டதாக இலங்கை திகழ்கின்றது.

சுகாதார அமைச்சினால் 2016ம் ஆண்டுக்கான கண் சிகிச்சை குறித்த விசேட அறிக்கையில், தெற்காசியாவில் அதிகளவு பார்வையற்றவர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1.7 வீதமான மக்கள் விழிப்புலனற்றவர்களாவர்.

தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை ஒரு வீதத்தை விடவும் மிகவும் குறைவானதாகும்.

கண் சிகிச்சை நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையே இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கண் புரை நோயினால் அதிகளவான இலங்கையர்கள் பார்வையை இழக்கின்றனர்.

பார்வையை இழக்கும் சுமர் 67 வீதமானவர்கள் கண் புரை நோயினால் பார்வையை இழக்கின்றனர்.

கண்புரை சத்திரசிகிச்சை உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையினால் சத்திரசிகிச்சை செய்து கொள்ளும் 41 வீதமான நபர்கள் பழைய பார்வையை பெற்றுக்கொள்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கண் சத்திரசிகிச்சை நிபுணத்துவ வைத்தியர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் பேர் இருக்க வேண்டும் என்ற போதிலும், 87 வைத்தியர்களே நாட்டில் தற்போது சேவையாற்றுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE