இலங்கையில் தமது உயர்ஸ்தானிகரகம் – நியூஸிலாந்து

236

இலங்கையில் தமது உயர்ஸ்தானிகரகம் ஒன்று அமைக்கப்படும் என்று நியூசிலாந்து அறிவித்துள்ளது நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் முரே மெக்கலி இதனை அறிவித்துள்ளார்.

இந்த உயர்ஸ்தானிகரக அமைப்பின்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவை விருத்தி செய்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

போருக்கு பின்னர் இலங்கையில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளுக்கு உதவியளிக்க நியூசிலாந்து தயாராகவே உள்ளது.

அத்துடன் கால்நடை வளர்ப்பு உட்பட்ட துறைகளில் பொருளாதாரத்துக்கு உதவவும் நியூசிலாந்து முன்வந்துள்ளது என்று முரே தெரிவித்துள்ளார்.

SHARE