சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம்-3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தது.
தயாரிப்பாளர் தரப்பில் இப்படம் 6 நாட்களில் ரூ 100 கோடி என கூறியது, இதை பல விநியோகஸ்தர்கள் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.
மேலும், சமீபத்தில் ஒரு விநியோகஸ்தர் ‘சிங்கம்-3 படம் முதல் 3 நாள் நல்ல கூட்டம் வந்தது உண்மை தான், ஆனால், அதன் பிறகு படத்திற்கு வசூலே இல்லை.
இங்கு இப்படியிருக்க படத்தின் தயாரிப்பாளர் படம் வெற்றி ரூ 100 கோடி வசூல் என்று கொண்டாடுவது மிகவும் வருத்தமளிக்கின்றது என கூறியுள்ளார்.