சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்

226

ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்து வரும் இளம் வீராங்கனையை சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி நேத்ரா. ஸ்பீட் கேட்டிங் எனப்படும் ஸ்கேட்டிங் விளையாட்டில் இவர் சின்ன வயதிலேயே பல சாதனைகள் படைத்துள்ளார்.

4 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு நேத்ரா இரண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்.

சிறுமி நேத்ரா, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராவார். விரைவில் தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் முன்னர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என அவர் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர்கள் விஜய் ரசிகர் மன்ற ஆட்களிடம் கூறியுள்ளார். பின்னர் இது நடிகர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டு அவர் நேத்ராவை சந்தித்துள்ளார்.

தாய்லாந்து போட்டியில் நேத்ரா சிறப்பாக செயல்ப்பட விஜய் தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொண்டார்.

SHARE