பரபரப்பான கனடிய தேர்தல் களத்தில் கனடிய பிரதமர்

202

கனடிய பாரளுமன்ற செயின்ட் லோரன்ட்(Saint-laurent) தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது .

செயின்ட் லோரன்ட் தொகுதியானது கனடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியான் அவர்கள் லிபெரல் கட்சியின் சார்பில் 1996 – 2015 வரை பிரதிநிதித்துவம் செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்று கிழமை மொன்றியல் செயின்ட் லோரன்ட் தொகுதிக்கு வந்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் வியாபார நிலையங்களுக்கு சென்று லிபரல் கட்சி வேட்பாளர் 26 வயது நிரம்பிய பாடசாலை ஆசிரியரான Emmanuella Lambropoulos ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்த தொகுதியில் லிபரல் கட்சியின் வெற்றிவாய்ப்பு அதிகமாகவே இருப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.

SHARE