வாழை இலையில் அறுசுவை உணவோடு ருசிக்க மணக்க சாப்பிடுவதே ஒரு தனி கலை தான்.
நம் வீட்ல ஏதாவது விஷேசமான அசைவ உணவுகள் தடபுடலா ரெடியாகும்.
இலையில் பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா? வலது பக்கமா? என்றெல்லாம் குழப்பம் வரும்.
சரி, உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே அது ஏன்?
உணவை பரிமாறுவதற்கு முன்பாக இனிப்பு கொடுப்பாங்க. இது ஏன் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா?