விக்ரமுடன் வாய்ப்பு உட்பட என் வாழ்க்கையை பாழாக்கிய கணவர் – பிரபல நடிகை குற்றச்சாட்டு

272

 

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர்ராஜனால் ஒயிலாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மிளா.

அதன் பின்னர் தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க தொடங்கினார். அங்கு பிரபலமாக இருந்தகாலத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் காதல் வயப்பட்டார். இந்த காதல் தோல்வியில் முடிய பின் நடிகர் கிஷோர் சத்யாவுடன் திருமணமானது.

பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்தவர் அவரையும் விவாகரத்து செய்த பின்னர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த பல விஷயங்களை சந்தித்த இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய சினிமா வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டையும் பாழாக்கியது எனது முதல் கணவர் கிஷோர் சத்யா தான் என்றும் விக்ரமுடன் நடிக்கவிருந்த வாய்ப்பையும் இவரால் தான் இழந்தேன் எனவும் கூறினார்.

SHARE